ரோகித் ஷர்மாவை வாங்க போட்டிபோடும் அணிகள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பதவி ரோகித் ஷர்மாவிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்குவதற்கு மற்றுமொரு அணி தயாராக உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ரோகித் ஷர்மாவை தொடர்பு கொண்ட டெல்லி கப்பிடல்ஸ் அணி, 'எங்கள் அணிக்கு வாருங்கள், நீங்கள் கேட்கும் தொகையை கொடுக்கிறோம். நீங்கள் விரும்பும்வரை தலைவர் பதவியில் இருங்கள்' எனக் கூறியிருக்கிறது.

ஆனால், ரோகித் ஷர்மாவோ, மும்பை அணியிடம் பேசுங்கள். அவர்கள் விடுவித்தால், நான் வருகிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

இதனைத் தொடர்ந்து, மும்பை அணியிடம் பேசியபோது, 'ரோஹித்தை விடுவிக்க வாய்ப்பே இல்லை' என டெல்லி அணியிடம் உறுதியாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இரு தரப்புக்கு இடையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே, குஜராத் டைடன்ஸ் அணிகளும் ரோகித் ஷர்மாவுக்காக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

ரோகித் ஷர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறும் முடிவில்தான் இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தியில் இருப்பதால்தான், இன்னமும் ஹார்திக் பாண்டியாவை வாழ்த்தி அவர் ட்வீட் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.