8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் அதிரடியாக கைது


நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில்

பொலன்னறுவை, திம்புலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  கல்வி பயிலும் 8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில்,  ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

 திம்புலாகல கல்வி வலயத்தின் அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள பாடசாலையில், 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 மாணவிகள் பல சந்தர்ப்பங்களில் கணித பாட ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக    பெற்றோர்கள் அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்

கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கணிதப்பாட ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர்  (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத தொடர்பான  மேலதிக விசாரணைகளை அரலகங்வில மகளிர் பொலிஸ் பணியகம் உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

-----------------
இரத்தினபுரி, எலபாத, அலுபத்கல பகுதியில் மூத்த சகோதரன், தனது இளைய சகோதரனை கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (7) இரவு நடந்துள்ளது.

அலுபத்கல, உடநிரிஎல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய  இளைஞன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மூத்த சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததால், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்தக் கொலையைச் செய்த சந்தேக நபரான மூத்த சகோதரன் மனநல நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

------------------

 கிரிபத்கொட பகுதியில் உள்ள இரவு விடுதியின் மீது இன்று  அதிகாலை ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
வாள்கள் மற்றும் பொல்லுகளை ஏந்திய 7 பேர் கொண்ட குழு ஒன்று இந்த விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
 
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களையும் உடைத்து, விடுதியிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தெஹியோவிட்ட மயானத்திற்கு எதிரே உள்ள உணவகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடுகளை கொண்ட ஜிப் ரக சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் உணவகத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சீத்தாவாக்கை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

-------------

இராஜகிரிய, ஒபேசேகரபுராவில் 22 வயது இளைஞர் ஒருவர் ஹெராயின், துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இளைஞரிடம் 102 கிராம் ஹெராயின் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.