தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் வைத்து உயிரிழந்த நபரின் மகனை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
16 வயதுடைய மகன் நேற்று (26) தங்காலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் இரண்டு மகன்கள், போதைப்பொருள் அடங்கிய லொறியின் உரிமையாளர்கள் மற்றும் 6 சந்தேக நபர்கள் இதற்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி, மகன் ஒருவரும், லொறி உரிமையாளர்களும் கடந்த 24ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குறித்த குழுவினரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.