தேசியத்தைப் பற்றிப்பேச தமிழரசுக் கட்சிக்கு அருகதை இல்லை : முன்னாள் மூத்த போராளி ஆவேசம்..!!

இதுகாலவரை தமிழனை அடகு வைத்ததை தவிர இலங்கை தமிழரசுக்கட்சி சாதித்தது என்ன, 2009 ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என முன்னாள் மூத்த போராளி சிறி ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு ஏதாவது பிரச்சனை என்றால் இந்தியாவிற்கு ஓடுவது அல்லது கொழும்பில் நிற்பது. பின்னர் வந்து தமிழ்தேசியம் கதைப்பது.

தமிழ் தேசியம் என கதைப்பதற்கும் தந்தை செல்வா பற்றி கதைப்பதற்கும் தமிழரசுக்கட்சிக்கு என்ன தகுதி உள்ளது..!

தேசியத்திற்காக இவ்வளவு காலமும் நீங்கள் செய்தது என்ன என கேள்வியெழுப்பியுள்ளார்.