கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            