கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பொலிஸ் நிலையத்தில், இலங்கைக்கான சுவிஸ் உயர்ஸ்தானிகர் முறைப்பாடு செய்துள்ளார்.
சுமார் நான்கரை மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் உட்பட பல ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெட்டகத்தில் தங்கம், வைரம், இரத்தினக்கல்லால் ஆன ஆபரணங்கள் இருந்ததாக தூதுவரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.