கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(16.10.2024)இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு காரில் வந்த மர்மநபர்கள் 45 வயதுடைய இர்ஸாட் என்ற நபர் மீது இன்று மாலை 3.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மாதம்பிட்டியவில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            