யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்

யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடிவதையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் மாணவர், விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால்  இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டுபாயில் இருக்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ‘ஆசியாவின் ராணி’யை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமான சலுகைக்காக அதிகாரிகளும் நீல மாணிக்ககல்லின் உரிமையாளரும் நிறுவனமொன்றுடன் இன்னும் கலந்துரையாடல் கட்டத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் குறித்த நீல மாணிக்ககல்லினை இன்னும் அதிக விலைக்கு ஏலம் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னர், பல உள்ளூர் வர்த்தகர்கள் இந்த நீல மாணிக்ககல்லிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக உரிமையாளர் சமில சுரங்க பன்னிலாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாணிக்ககல்லினை,விஞ்ஞானி ஒருவர் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.