மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மதுபான போத்தல் ஸ்டிக்கர் நடைமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுபான போத்தல்களில் பொறிக்கப்படும் ஸ்டிக்கர்கள் தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய காலத்தில் ஸ்டிக்கர் முறைமை அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், உரியமுறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம் குறித்த ஆய்வுகூடம் ஒன்றை நிறுவுதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பினை வலுப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இது குறித்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது முழுமையாக வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் கலால் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.