இலங்கையின் சீரற்ற காலநிலை: தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையானது காரணமாக தென்னிந்திய பகுதிகளிலும், தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வானது எதிர்வரும் 2 நாட்களுக்கு நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய, அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருந்ததை விட வெப்பம் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் சில இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.