கோட்டாபயவின் பெறுமதியை எதிர்காலத்தில் இலங்கையர்கள் உணர்வார்கள்! -பெரமுன கட்சி அறிக்கை

நாட்டில் 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய கோட்டாபய ராஜபக்சவின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுவதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை வரலாற்றில் அதிபர் ஒருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்முறை எனவும், அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்டவையே காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.