இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!




மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், தகுதிகாண் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

தாய்லாந்து மகளிர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 123 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து மகளிர் அணி 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.