இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆங்கில மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் Safe Foundation உடன் இணைந்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இலவசமாக ஆங்கில பயற்சி நெறியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
தங்காலை, பன்னிபிட்டிய, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் பதுளை பிரதேசங்களில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக பயிற்சி நிலையங்களில் இந்த ஆங்கில மொழிப் பயிற்சி நெறி நடத்தப்படும்.
ஆங்கில பயற்சிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி 20 நவம்பர் 2022 அன்று முடிவடையும் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.