வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை பெண்கள்


அவுஸ்திரேலியாவில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய குடியேற்ற சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தன்னையும் தன் தாயும் சகோதரியும் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அச்சப்படுவதாக யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற கென்பராவைச் சேர்ந்த 19 வயது தாதியர் மாணவி பியுமெதர்ஷிகா கனேஷன், சிறையில் அடைக்கப்படும் அல்லது நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

குடியேற்ற சட்டத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள் மனித உரிமைகளுடன் முற்றிலும் பொருந்தாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆபத்தை ஏற்படுத்தும் சட்டத்தை கைவிட வேண்டும் என மனித உரிமைகள் குழுக்கள் செனட் குழுவிடம் தெரிவித்தன.