யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பெண் சிப்பாய் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த கே.எம் .கே .செவ்வந்தி என்ற பெண் சிப்பாயே உயிரிழந்தவராவார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.