குறைக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணம் - மகிழ்ச்சித் தகவல்

இஸ்ரேலுக்கு (Israel) வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறிக்க உள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ( Sri Lanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.

பழைய முறையில் நவம்பர் மாதம் வரை விமான பயணச்சீட்டின் முன்பதிவு செய்யப்பட்டதால் புதிய முறையை டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் கொரிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் விமானப் பயணச்சீட்டு வழங்கும் முறை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனால் சில விமான டிக்கெட் வாங்குபவர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பயணச்சீட்டுகளை நேரடியாக கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து அதற்கான கட்டணத்தை குறைத்துள்ளது.

ஏறக்குறைய ஒரு மாதத்தில், 500 விமான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.75,000 முதல் 90,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.