இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் 72 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இருபதுக்கு20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

கண்டியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில்   நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக சதீர சமரவிக்ரம 51 ஓட்டங்களையும் அதிரடி காட்டிய மத்தியூஸ் 22 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பத்தும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 23, ஹசர்ங்க 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதனை தொடந்து 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு ஆப்கானிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்கள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.