சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியை அனுஷ்கா சஞ்சீவனியும், அயர்லாந்து அணிக்கு லாரா டெல்னியும் தலைமை தாங்கவுள்ளனர்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியதுடம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது