வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த மரணத்தில் குற்றமொன்று இழைக்கப்பட்டுள்ளதை நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்து, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனை தொடர்பில் ஆராய்வதற்காக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட மருத்துவ குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே, கொழும்பு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.