நேபாள அணியை எதிர்கொள்ளும் இலங்கை அணி!


உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி நாளை (12) இடம்பெறவுள்ளது.
 
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதவுள்ளன.
 
இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5  மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதேநேரம் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் போது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரரான மெத்தியூ வேடுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

அவர் ஐசிசியின் நடத்தை விதிமுறைகளை மீறி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம்  உலகக் கிண்ணத் தொடரின் நேற்று நடைபெற்ற 21ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
 
இந்நிலையில், 114 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.