அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உள்ளிட்ட மேலதிக நிதி உதவியை இலங்கை சீனாவிடம் கோரியுள்ளது.இந்த ஆண்டு சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கடனை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது.இந்நிலையில் தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடும் வரை இந்த கொடுப்பனவுகளை தாமதமாக செலுத்த சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, உள்ளூர் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கான கடனையும் இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை மேலதிக நிதியுதவி கேட்டுள்ளது என்றும் இரு தரப்பும் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சீனத் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.முன்னதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றமை குறிப்பிடத்த்க்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            