மக்களிடம் உண்மையான விடயத்தை கூறுங்கள்: அரசாங்கத்திடம் உலக வங்கி வலியுறுத்து

தற்போது அரசியல் பேச நேரமில்லையெனவும் பொருளாதார தொடர்பில் மக்களிடம் உண்மையான விடயத்தை எடுத்துக் கூறுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் பாரிஸ் ஹடட் செர்வோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளக கடன் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்ற அங்கீகாரமானது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சாதகமானதெனவும் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் இன்று (18.07.2023) பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடக மைய‌ம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை மையப்படுத்திய அனைத்து மறுசீரமைப்புகளும் அத்தியாவசியமானவை எனவும் இலங்கையில் தற்போது அரசியல் பேச நேரமில்லையெனவும் மக்களிடம் உண்மையான விடயத்தை எடுத்துக் கூற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், மத்திய வங்கியின் சுயாதீன தன்மை அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.