உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு சென்று அந்த நாடுகளில் அனுபவம் பெற வேண்டும் என்பதே தனது எண்ணம் என அவர் கூறியுள்ளார்.
இலங்கை அனைத்து தரப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் புதையல் மீது அமர்ந்து பிச்சை எடுக்கும் தேசம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            