ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொடர்ந்து நினைவூட்டப்பட்ட போதிலும் பொது மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் சதவீதம் 50 சதவீதமாக இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்த சதவீதம் 20 சதவீதமாக உள்ளதாக தெரிவித்தார்.
எனவே, கட்டுக்கதைகளை நம்பாது பூஸ்டர் டோஸை கூடிய விரைவில் பெறுமாறு அவர் வலியுறுத்தினார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            