வரலாற்றில் முதல் தடவையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்த முல்லைத்தீவு பாடசாலைகள்!

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் வரலாற்றில் முதல் தடவையாக தேசியமட்ட மல்யுத்த போட்டியில் பதக்கங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளன.

வருடம்தோறும் கல்வியமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படுகின்றது. அந்த வகையில்,  இந்த மல்யுத்த போட்டி, இவ்வருடம்  கம்பகாவில் நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 3 நாட்கள் இடம்பெற்றன.

கம்பகாவில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட போட்டியிலேயே முல்/வித்தியானந்தா கல்லூரி, முல்/கலைமகள் வித்தியாலயம் என்பன முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று  முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளன.

இப்போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 12 பேர் பங்குகற்றியதுடன் 5 பேர் காலிறுதிவரை முன்னேறியிருந்தனர். அதேவேளை கலைமகள் வித்தியாலயம் சார்பாக 7 மாணவர்கள் பங்குகொண்டனர். அதில் ஒருவர் இறுதிவரை முன்னேறினார்.

வடமாகாணம் சார்பாக முல்லைத்தீவு பாடசாலைகள் மாத்திரம் மல்யுத்த போட்டியில் பங்குபற்றியிருந்தமையால் நேரடியாக தேசிய போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவன் R.றஜிதன் தங்க பதக்கத்தையும் (1ம் இடம்) கலைமகள் வித்தியாலய மாணவன் ஜெயானந்தராசா வினேசன் (51-55)kg பிரிவு வெள்ளிப் பதக்கம் (2ம் இடம்) பெற்றிருந்தார். 

வீரர்களுக்கான பயிற்சியினை மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஆதரவு ஒழுங்குபடுத்தல்களுடன் மாவட்ட மல்யுத்த பயிற்றுனர் தர்சன் வழங்கிவருகிறார்.

மாணவர்களின் சாதனைக்கு பாடசாலை நிர்வாகம், அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுனர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் அதீத அக்கறை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலைகள் முதற் தடவையான மாவட்டமட்ட போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைப்பதற்கு வழிவகுத்தது.