நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இலங்கை அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டி ஃபுளோரிடாவில் நடைபெற இருந்தது.
ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இது இலங்கை அணிக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் தென்னாபிரிக்க அணி 6 புள்ளிகளை பெற்றதால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் பங்களாதேஷ், நெதர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
இலங்கை அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி இறுதி போட்டியில் அபார வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் பங்களாதேஷ் - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் இலங்கை வாய்ப்பு உள்ளது.