விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய மகிந்த: சுட்டிக்காட்டும் முன்னாள் எம்.பி

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு பை நிறைய பணம் வழங்கியதன் மூலமாகவே யுத்தம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது திட்டமிட்ட சதி எனவும் அதன் பின்னர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான பல சதிகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அதிபரும் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அந்த நடவடிக்கைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.