யுத்த வெற்றியை நினைவுகூர ஒன்றுகூடிய சிங்கள மக்கள்!

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை நினைவு கூரும் நிகழ்வு நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமென்ட் 3 ஆவது படையணி முகாமில் இன்று(18.05.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது யுத்தத்தில் உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு கூரும் முகமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் மத குருமார்களின் மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றுள்ளது.

மேலும் யுத்தத்தில் உயிர் நீர்த்த இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்கள், அரச அதிகாரிகளான நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, பிரதேச செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் யுத்தத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்ததை முடிவிற்கு கொண்டு வந்தவர்கள் என போரில் உயிர்நீத்த இராணுவத்தினரை சிங்கள் மக்கள் நினைவுகூருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.