இந்தியாவுடன் படுதோல்வியடைந்த இலங்கை: மொஹான் டி சில்வா எடுத்த அதிரடி முடிவு

இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாரிய தோல்வியுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை பலறும் விமர்சிக்கத் தொடங்கிய நிலையிலேயே கிரிக்கெட் (எஸ்எல்சி) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக, இலங்கை கிரிக்கெட் குறித்து பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்தோடு, இந்தியாவுக்கு எதிரான தோல்வியுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, அதிகாரிகள் பதவி விலகாவிட்டால், கடுமையான முடிவுகளை எடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.