பொருளாதார நெருக்கடியை இலங்கையால் வெற்றிகரமாக சமாளிக்க முடியும்-பிரதமர் தினேஷ் குணவர்தன!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் குணவர்தன, தற்போது நிலவும் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நெருக்கடியை சமாளிக்க பல நாடுகளின் ஆதரவை பெற்று வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், அரசியல் நலன்களுக்காக ஒரு சில தரப்பினர் சர்வதேச அமைப்புகளின் தலையீட்டை நாடுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.அரசாங்கத்திற்கு எதிராக சில நபர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.