சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் இலங்கை



இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.


போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பங்களாதேஷ் அணிக்கு 125 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நடப்பு தொடரில் இலங்கை அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில் தற்போது வங்கதேசத்திடம் தோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.