இலங்கையின் கடன் விவகாரம் - ஐ.எம். எவ் வெளியிட்ட தகவல்

இலங்கையின் கடன் விவகாரத்திற்கு சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜி 20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பொதுக் கட்டமைப்பிற்குள் சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் அதிகரித்து வரும் கடன் பாதிப்புகளின் பின்னணிகள் கடன் கட்டமைப்பை வலுப்படுத்தும், கடனை தீர்க்கும் வேகத்தையும் செயற்றிறனையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தான் வலுவாக ஆதரிப்பதாகவும் கடன் கட்டமைப்பை வலுப்படுத்துவது ஜீ 20 இக்கு இன்றிமையாதது என்றும் சுட்டிக்காட்டினார்.