உயர்வடையும் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு..!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது ஜனவரி மாதத்தின் இறுதியில் காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பான 2,121 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு கடந்த பெப்ரவரியில் 29 மில்லியன் டொலரில் இருந்து 28 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.