இலங்கையின் நீண்டகால கோரிக்கை - இரண்டு வருட அவகாசம் வழங்கிய சீனா


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்திற்கு முன்னோடியாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படுவதற்கு தனது கடன்களை மறுசீரமைப்பதற்கான உறுதிப்பாட்டிற்கான இலங்கையின் நீண்டகால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்களுக்கு பொறுப்பான சீனாவின் எக்சிம் வங்கியானது நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்களை குறுகிய காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநர்களாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் கடன் வழங்குநர்கள் அனைவரும் நடுத்தர மற்றும் நீண்ட கால கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணைய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF) சீனாவின் ஆதரவையும் நீடிப்பதோடு IMF திட்டத்திற்கு வழிவகுக்கும் கடன் மறுசீரமைப்பு பற்றிய விவாதங்களை முன்னோக்கி செல்லுமாறும் கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள பாரிஸ் குழு கூட்டத்திற்கு முன்னதாக சீனாவின் உறுதிமொழிகள் அடங்கிய கடிதம், இலங்கையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீனாவின் குறித்த ஆதரவானது இலங்கைக்கு வழங்கப்படவுள்ள IMF திட்டத்திற்கு முன்னோடியாக குறித்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

சீனாவின் ஆதரவைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகள் மற்றும் அதன் கடன்களை மறுசீரமைப்பதற்கான இந்தியாவின் ஆதரவுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வகையில் IMFக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்தியா அறிவித்த சிறிது நேரத்திலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட உடனேயே, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு ஆதரவளிப்பதில் "முயற்சியுடன்" இருக்குமாறு மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்திருந்த அவர், இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வாரத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்திருந்த சீனாவின் சர்வதேச திணைக்களத்தின் துணை அமைச்சர் சென் சோவும், சீனா தனது கடன்களை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையில் சில ஆதடவன தகவல்களை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் .

இந்நிலையில் வெளிநாட்டு கடன்களுக்கு பொறுப்பான அரச நிறுவனமான சீன எக்சிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கியின் கடிதம் இன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தில் உள்ள சீன உறுதிமொழிகள் பாரிஸ் குழு மற்றும் IMF இன் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா என்பது உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுகிறது.

ஆனால் IMF அதன் பிணையெடுப்பு திட்டத்திற்கு வழிவகுத்த கடன் மறுசீரமைப்பு அட்டவணை பற்றிய விவாதங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை நிதி அமைச்சகம் போதுமான சம்மதம் இருப்பதாக நம்புவதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.