இந்தியா சென்ற ஜனாதிபதி ரணிலுக்கு அமோக வரவேற்பு

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் இன்று மதியம் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா இன்று மாலை டெல்லியில் உள்ள இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற உள்ளது.