எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட பண்ட வரி நீக்கம்!



பொருட்களுக்கான விசேட பண்ட வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய வரியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார்

பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.