கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான அடுக்குமாடி குடியிருப்பில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் சி பிரிவில் உள்ள மேல் மாடியின் சுவரின் ஒரு பகுதியே இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (13)  இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு பழமையானது எனவும், சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாரிய ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.