வெடித்து சிதறிய மீ புதிய மொடல் ஸ்மார்ட் போன்

ரியல்மி நிறுவனத்தின் புதிய எக் ஸ்டி ஸ்மார்ட் போன் மற்றொரு யூனிப் வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.   ஸ்மார்ட் போன்கள் வெடித்து தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ரியல்மி எக் ஸ்டி ஸ்மார்ட் போன் ஒன்று வெடித்து சிதறியது. தற்போது வெடித்த  ஸ்மார்ட் போனின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட நபர் டுவிட்டரில்  பதிவிட்டார். புகைப்படத்தின் படி ஸ்மார்ட் போன் இருபுறத்திலும் முழுமையாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சம்பவம் பற்றி தெரிந்த ரியல்மிஇதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறியுள்ளது.