உலகில் பிறந்த மிகச் சிறிய குழந்தை - எடை எவ்வளவு தெரியுமா...!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையின் எடை 12.4 அவுன்ஸ் அதாவது 350 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதேசமயம் அந்தக் குழந்தை பிறந்தபோது, ​​நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆகவே தாயும், குழந்தையும் ஆபத்தான நிலையில் இருந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையை வழங்கத் தொடங்கினர்.

முதலில் காப்பாற்றுவது கடினமாக இருக்கும் எனத் தோன்றினாலும், மருத்துவர்கள் நிலைமையைக் கவனித்து, குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொண்டனர்.

சுமார் 4 மாத சிகிச்சைக்கு பிறகு அந்தக் குழுந்தை தற்போது நலமுடன் உள்ளது.

இதையடுத்து அந்தக் குழந்தையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

தற்போது குழந்தையின் எடை 3.40 கிலோவாகிவிட்டது.