அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

இலங்கை (Sri Lanka) இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் அதிகளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 2 பில்லியினுக்கும் அதிகமான டொலர்களை வெளிநாட்டு வருமானமாக  இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியின் அமெரிக்க டொலர்களை இலங்கை வெளிநாட்டு வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கை கடந்த 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் ஈட்டிய வெளிநாட்டு வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 19.7 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் இலங்கை 11.4 வீத வெளிநாட்டு வருமானத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.