வாயை மூடவும் - உச்சகட்ட கோபத்தில் கொந்தளித்த ரணில் - வைரலாகும் காணொளி

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட போது பெரும் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது.

எதிரணியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியிருந்தர்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் கோமடைந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்.

இதன் போது எதிரணியில் இருந்தவர்கள் ஜனாதிபதியை பேச விடாமல் கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் கடும் கோபமடைந்த ஜனாதிபதி “வாயை மூடிக் கொண்டு அமருங்கள். நான் தான் உன்னை அரசியலுக்கே கொண்டுவந்தேன். வாயை மூடு....” என ஜனாதிபதி கோபத்துடன் கூறியுள்ளார்.