நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் அதிகளவிலான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.