நேற்றிரவு மஹரகமவை உலுக்கிய துப்பாக்கி சூடு : சிசிடிவி காட்சிகள் வெளியாகின



மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று (6) இரவு 9 மணியளவில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயது இளைஞர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிஸ்டல் ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து இன்று மதியம் வரை வெளியாகவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.