பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி!

பேலியகொட ரயில் பாதையின் குருகுல வித்தியாலயத்திற்கு அருகில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.குற்றம் நடந்த இடத்தில் 09 மி.மீ துப்பாக்கி குண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.