இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
தற்போது வற் (VAT) வரி 15 சதவீதமாக நடைமுறையில் இருக்கின்றது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்: அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும் வரி திட்டம் | Decision To Increase Vat To 18 Percent
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வரி வசூல் இலக்குகளை அடைய முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் வரி வருமானம் மற்றும் முதன்மை சமநிலை இலக்குகளை அடைவதற்காக வற் (VAT) ஐ அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.