தொடரும் அவலம்! நாட்டிற்கு வரவிருந்த 4 எரிபொருள் கப்பல்கள் ரத்து

இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், பிரச்சினை தொடரும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் முத்துராஜவெல முனையத்தில் சுமார் 20,000 தொன் டீசல் சரக்கு இறக்கப்பட்டது. அவை அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கே அது போதுமானதாக இருக்கும்.

இதேவேளை, இம்மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் வரவிருந்த நான்கு பெட்ரோல் மற்றும் டீசல் கப்பல்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது சுமார் 7000 தொன் டீசல் உற்பத்தித் திறன் கொண்டுள்ளதாகவும், மசகு எண்ணெய்க் குறைவினால் இன்னும் சில நாட்களில் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.