செவ்வந்தியின் தொலைபேசியினால் பெரும் சிக்கலில் முக்கிய புள்ளிகள்: காப்பாற்ற தீவிர முயற்சி

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி பயன்படுத்திய தொலைபேசி செய்திகளின் அடிப்படையில் இந்த நபர்கள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

07 பேர் கைது  

கெஹல்பத்தர பத்மே பொலிஸ் குழுக்களிடம் வாக்குமூலம் அளித்ததால், அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே விசாரணையின் போது பொலிஸாரை தவறாக வழிநடத்த தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செவ்வந்தி தலைமறைவாகியிருக்க உதவிய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாயிருந்தார்.

அதன்படி, மித்தெனிய, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என அவர் தங்கியிருந்த பகுதிகளில் உதவியவர்கள் கைதுசெய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.