சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (வியாழக்கிழமை) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.அத்துடன், உத்தியோகப்பூர்வமற்ற முறையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 23ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.