காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
பெண்ணின் இரண்டாவது கணவரே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்துள்ளது.
இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் இரண்டாவது கணவனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய நபரை கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.