ஸ்காட்லாந்து யார்டின் உதவி கோரப்படவில்லை: ரணிலின் வாக்குறுதியை மறுக்கும் இராஜதந்திரிகள்

ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு கடந்த வருடம் ஸ்காட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்த நிலையில், அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என பிரித்தானிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், அத்தகைய முறையான தகவல் எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவிவில்லை என பிரித்தானிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரணில் விக்ரமசிங்க, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்யவும், குண்டுவெடிப்புகளில் தலைமறைவான கைகள் உள்ளதா என்பதை கண்டறியவும் ஸ்கொட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் கொழும்பிற்கு விஜயம் செய்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித் திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவரை சந்தித்த போதே, அதிபர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.